1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (11:18 IST)

’ டிக் டாக் ’ வீடியோவால் நண்பனை கொன்ற இளைஞர்...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள தாழவேடு கிராமத்தில் வசித்து வந்த விஜய், வெங்கட்ராமன் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தனர். இதில் வெங்கட்ராமன் என்பவர் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களை இழிவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதாக தெரிகிறது.
இந்த வீடியோவை பார்த்த மக்கள் வெங்கட்ராமனை கைது செய்து வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த விஜய் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.
 
இதனையடுத்து, காவல்துறையினர் வெங்கட்ராமனின் தந்தை கன்னியப்பனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.இதனால் ஆவேசம் அடைந்த வெங்கட்ராமன் மது அருந்தும் போது விஜய்யை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது.
 
இந்நிலையில் விஜய் இறந்ததை உறுதி செய்த வெங்கட்ராமன் தானாக திருத்தணி காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். தற்போது வழக்கு பதிவு செய்து வெங்கட்ராமனை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.