தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :
கோவை, நீலகிரி, வேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும், சென்னையில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.