புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (09:03 IST)

தஞ்சை மாணவர்கள் கொரோனா பாதிப்பு! – 168 ஆக உயர்வு!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு 168ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சமீப காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து பட்டுக்கோட்டை, ஆலத்தூர், தஞ்சை மாநகர பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கொரோனா உறுதியானது. இதனால் நாளை முதல் தேதி குறிப்பிடாமல் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 11 பள்ளிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.