வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (19:54 IST)

இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
தற்போது  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில்,  இந்தியா கூட்டணி  திமுக இடம்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான இட    ஒதுக்கீடு கையெழுத்தாகி, திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
 
திருச்சியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில்,  நேற்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இன்று தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின்போது மீனவர் வீட்டில்  தேநீர் அருந்தினார் முதல்வர் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது.
 
தற்போது தூத்துக்குடி பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர், சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மக்களவை தேர்தல் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம். சர்வாதிகாரத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் தேர்தல் இது. மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று பேசினார்.
 
மேலும், கடந்த கால அதிமுக ஆட்சியின் வைக்கப்பட்ட  கரும்புள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம். அன்று கேட்ட மரண ஓலம் இன்றும் கேட்டுக் கொண்டிருக்க்றது. அப்போது தமிழ் நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூ நடந்துள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமே தெரிவித்துள்ளது என்று கூறினார்.