ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (20:23 IST)

காவல்துறையின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது!-ராமதாஸ்

ramadass
பா.ம.க. இரு சக்கர ஊர்தி பேரணிக்கு  அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என முன்னாள் பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மருத்துவர் ராமதாஸ் தன் சமூகவலைதள பக்கத்தில், 
 
''பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் செயல்திட்டத்தின்படி, நாளை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இரு சக்கர ஊர்திப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பேரணி நடத்த பாட்டாளி மக்கள் கட்சியினர் தயாராக உள்ள நிலையில், பல இடங்களில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக  கூறப்படுகிறது.  காவல்துறையின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது!
 
பாட்டாளி மக்கள் கட்சியினரை ஒருங்கிணைக்கும் நோக்குடனும்,  கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடனும் தான் இரு சக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்படுகின்றன.  அமைதியாகவும், ஒழுங்கமைவுடனும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பேரணியை நடத்த வேண்டும் என்று பா.ம.கவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பிறருக்கு பாதிப்பு இல்லாத வகையில் இரு சக்கர ஊர்தி நடத்தும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு உண்டு. அதை மதித்து பா.ம.க.வினர் நடத்தும் இருசக்கர ஊர்தி பேரணிகளுக்கு  நாளை காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஒருவேளை நாளை இல்லாவிட்டால்  இன்னொரு  நாளில்  நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டு,ம்'' என்று தெரிவித்துள்ளார்.