1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (12:03 IST)

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம்: மாணவிகளின் நாடகமா?

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் 45 மாணவிகள் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது விசாரணையில் அவை அனைத்தும் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து நடத்திய நாடகம் என்று தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து 45க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதன் காரணமாக பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இது குறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் பள்ளியில் எந்த விதமான வாயு கசிவும் ஏற்படவில்லை என்றும் கூறினர். பள்ளியில் மட்டுமின்றி பள்ளியின் சுற்றுப்புறத்தில் உள்ள ஆலைகளில் இருந்தும் வாயுக்கசிவு இல்லை என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
 
அதன் பிறகு அவர்கள் மாணவி மாணவிகளிடம் விசாரணை செய்த போது பள்ளி பாட வேலைகளை புறக்கணிக்க மாணவிகள் ஒன்றாக சேர்ந்து நடத்திய நாடகமாக இருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதாக கூறியுள்ளனர்.  இந்த நிலையில் திருவொற்றியூர் பள்ளி என்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Mahendran