ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (16:02 IST)

ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: திருநாவுக்கரசர்

நான் ஜெயலலிதாவுக்கு நன்றி கடன் படவில்லை, ஜெயலலிதா தான் எனக்கு நன்றி கடன் பட்டுள்ளார் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்  
 
ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் எனக்கு தான் நன்றி கடன் பெற்றுள்ளார், நான் ஜெயலலிதாவை பலமுறை காப்பாற்றி உள்ளேன். என்னால் தான் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார். என்னால் தான் அவர் முதல்வரானார். 
 
நான் காப்பாற்றியதால் தான் ஜெயலலிதா முதலமைச்சராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் ஆகினர். எனவே எனக்கு ஜெயலலிதா நன்றியாக இருக்க வேண்டும், நான் ஜெயலலிதாவுக்கு நன்றியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.  
 
ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நன்மை செய்துள்ளேன். ஆனால் எனக்கு அவர் நிறைய கெடுதல் தான் செய்தி உள்ளார், அவர் இறந்து விட்டதால் அது முடிந்து போன விஷயமாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார்.
 
Edited by Siva