செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (08:06 IST)

பிரதமரை சந்திப்போம்... அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா ஐடியா!

மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை. 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அதிமுக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர். 
 
இதனைடையே திருமாவளவன், மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த வேண்டும். சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அணை கட்டுவதை தடுக்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.