வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:22 IST)

எங்கள் கூட்டணியில் பாமக இடம்பெறாது – திருமாவளவன் ஓபன் டாக் !

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்தப் பேட்டியொன்றில் பாமக வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக வின் வரவைக் கண்டு கொள்ளவில்லை. அதற்குக் கூட்டணியில் உள்ள சிலத் தலைவர்களின் அழுத்தமேக் காரணம் என சொல்லப்பட்டது. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் எனக் கூறியதாலேயே திமுக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள தொல் திருமாவளவன் இந்தக் கருத்தை உறுதி செய்துள்ளார். அதில் பாமக வுடனானக் கூட்டணி குறித்தக் கேள்விக்கு ‘ பாமக வோடு இனி என்றுமேக் கூட்டணிக் கிடையாது. எங்கள் கட்சியினர் லவ் ஜிகாத் செய்வதாக  அவர்கள் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். எங்கள் ஆதரவு பாஜகவுக்கு இல்லை. பாமக கூட்டணி வைக்கும் இடத்தில் விசிக இணையாது. இந்த இரண்டு விஷயங்களிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்’  எனக் கூறியுள்ளார்.