திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (15:30 IST)

துணைவேந்தர் நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றபடவில்லை… திருமா வளவன் புகார்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தலித் துணை வேந்தர்கள் ஒருவர் கூட இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவாளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் பேசிய அவர் ’தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டியல் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட துணைவேந்தராக இல்லை. தகுதியானவர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட உள்ள பெரியார் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பட்டியல் இனத்தவர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

அதற்கு ஆளுநர் இது சம்மந்தமாக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால்  இட ஒதுக்கீட்டை பின்பற்ற தயார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.