கருவேப்பிலங்குறிச்சி மாணவி கொலை – விருத்தாசலத்தில் சாலை மறியல் !
கருவேப்பிலங்குறிச்சி மாணவி திலகவதியைக் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த திலகவதி என்ற மாணவியை அதேப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்க மறுத்ததால் குத்திக் கொலை செய்ததால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும் கொலை செய்த இளைஞர் தலித் பிரிவை சேர்ந்தவர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விருத்தாசலம் பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.