திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (21:08 IST)

தெர்மாக்கோல் ஐடியா கொடுத்த பொதுப்பணித்துறை எஞ்சினியரை தெறிக்க வைத்த உத்தரவு

உலகில் யாருக்குமே தோன்றாத புதுப்புது ஐடியாக்கள் வருவது நம் தமிழ்நாட்டின் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் தான். கடந்த இரண்டு நாட்களாக ஃபேஸ்புக், டுவிட்டரில் கலாயக்கப்படும் ஒரு விஷயம் தெர்மாக்கோல். வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க ரூ.10 லட்சம் செலவில் தெர்மாகோலை மிதக்க விட்டனர். ஆனால் பத்தே நிமிடத்தில் பத்து லட்சம் காலி. அனைத்து தெர்மாக்கோல்களும் கரை ஒதுங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.





ஒரு முயற்சிக்கு வெற்றி கிடைத்தால் அதன் புகழை அரசியல்வாதி ஏற்றுக்கொள்வதும், தோல்வி அடைந்தால் அதிகாரி மீது பழிதூக்கி போடுவதும் தமிழகத்தில் வாடிக்கைதானே. அந்த வகையில் தெர்மாகோல் திட்டம் குறித்து ஐடியா கொடுத்த பொதுப்பணித்துறை எஞ்சினியர் முத்துபாண்டிக்கு பணியிட மாற்றம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தெறிக்க வைக்கும் உத்தரவு குறித்து உயரதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ''இது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் வழக்கமான பணியிட மாற்றம் தான். அவருடன் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெர்மாக்கோல் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே பணியிட மாற்றம் முடிவு எடுக்கப்பட்டது' என்று கூறினர்.