திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (13:21 IST)

ஓடும் ரயிலில் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு

rail
திருவனந்தரபுரம் – சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக இந்தியாவில் ஓடும் ரயில்களில் சில  இடங்களில் விபத்து ஏற்பட்டது. குறிப்பாக ஓடிஷா ரயில் கோர விபத்தில்  300க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  திருவனந்தபுரம் –சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கினர். உடனே ரயிலில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, 20 நிமிடங்கள் தாமதாக ரயில் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகிறது.