சாப்பாட்டுக்கு வழியில்லை...இளைஞர் செய்த விபரீதம் ....
ஈரோட்டில் சாப்பாடுக்கு வழி இல்லாமல் இருந்ததால் சிறைக்குச் செல்ல ஒரு இளைஞர் வித்தியாசமான முடிவெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் வசிக்கும் சந்தோஷ் குமார் என்ற நபர் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் சிறைக்குச் சென்றாலாவது உணவு கிடைக்கும் என்று நினைத்து, ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.