திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (00:00 IST)

பிரபல நடிகருக்கு பிரசாரத்தில் வந்த சோதனை….

எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் இல்லாததால் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்யாமலேயே இடத்தைக் காலி செய்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்று மானாமதுரையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளார் சிவசங்கரியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நடிகரும் ச.ம.க தலைவருமான சரத்குமார் வருகை தந்தார்.

ஆனால் வேட்பாளரின் குடும்பத்தைத் தவிர அங்கு மக்கள் அதிகளவில் கூட்டமில்லை; ஒருசிலர் மட்டுமே கூடியிருந்தனர். இதனால் சரத்குமார் வந்த வேகத்திலேயே இடத்தைக் காலி செய்தார்.