வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (18:49 IST)

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும்- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற  போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தன. இதையடுத்து அரசுடன்  இன்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெறப்போவதில்லை அறிவித்துள்ளன.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தை அண்னா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது 

எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களை கருத்தில் கொண்டு  போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. 

இதை அடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கள் அறிவித்துள்ளது.

மேலும், அமைச்சர் சிவங்கர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், நல்ல முடிவை அறிவிப்பார் என அன்புகிறோம் எனவும், கோரிக்ர்கைகள் நிறைவேறும் வரை போராட்ட அறிவிப்பை திரும்ப பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.