புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (18:40 IST)

முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ஓபிஎஸ் மகன் ....

panner
முதல் அமைச்சர் முக ஸ்டாலினை  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பனீய்ர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பாராட்டியுள்ளார்.

கடந்தாண்டு முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று அஅட்சிப் பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் எம்பி, முக ஸ்டாலினை சந்தித்த ரகசியத்தை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ள்ளார்.

அதில்,  நானும் முதல்வர் அமைச்சர் ஸ்டாலினும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் எம்பி முதல்வரை சதிக்க வந்தார். அவரை உள்ளே வரும்படி கூறினோம். அப்போது, ஒரு துண்டுபோட்டுவிட்டு, ஒரு புத்தகம் கொடுத்துவிட்டு, ''நீங்க நன்றாக ஆட்சி நடத்துகிறீர்கள்'' என்று பாராட்டினார் எனத் தெரிவித்துள்ளார்.