1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (14:50 IST)

’3 பெண்களுடன் கலியாணம் ’ : உல்லாச ஆசையில் உயிரை விட்ட இளைஞர் !

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளா நேட்சுரல்ஸ் சலூனில் வேலைபார்த்து வந்தவர் ராஜா ( 30). இவர் தனது மாமன் மகள் சந்தியாவை முதலில்  திருமணம் செய்துகொண்டார்.  இந்த தம்பதிக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.  
இந்நிலையில் இவருக்கு தேனியில் பணியிடை மாற்றம் கொடுக்க அங்கு சென்ற ராஜா, அங்குள்ள தனலட்சுமி என்பவருடன் பழகி, தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து திருமணம் செய்துகொண்டார். 
 
இதனைத்தொடர்ந்து  வேறொரு ஊருக்கு பணியிடை  மாற்றம் செய்யப்பட்டவர்,அங்கிருந்த ஒரு ஆதரவற்ற பெண்ணான கவிதாவை (19), தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து மூன்றாவதாக திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமக இருந்துள்ளார். பின்னர்  புதுச்சேரிக்கு மாற்றம் ஆன ராஜா அங்கு ஒரு விடுதி எடுத்து காவியாவுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டுள்ளார். பின்னர் காவியாவுக்கு போன்போட்டு அவரை விடுதிக்கு அழைக்க அவரோ அதை மறுத்துவிட்டார்.
 
இதனால் மனமுடைந்த  ராஜா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கணவர் இறந்த செய்திகேட்டு மூவரும் விடுதிக்கு வந்து மூவரும் இவர் எனது கணவர் என சொந்தம் கொண்டாட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின்னர் மூன்று பெண்களை கட்டியும் வாழ்க்கை வாழாமல் தற்கொலை செய்து கொண்டு மூவரையும் தவிக்க விட்டு சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.