1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (15:10 IST)

''கடற்படையினர் சுட்டதில் மீன்பிடி படகில் 40 குண்டுகள் பாய்ந்துள்ளது ''-திருமா

thirumavalavan
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மீனவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவரை காப்பாற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேல் உடல்நிலை குறித்து அவரது மனைவி மதிமதி, அவரது அண்ணன் ஆகியோரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். 
 

அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் பேசினேன். வயிற்றிலிருந்த குண்டு அப்புறப்படுத்தப்பட்டதுடன் சேதமடைந்த குடற்பகுதியும் வெட்டியெடுக்கப்பட்டுவிட்டது என்பதையும் விளக்கினார்.

அவரைக் காப்பாற்ற அவருக்கு மேலும் உயர் சிகிச்சையளிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்  இது குறித்து மாண்புமிகு அமைச்சர் #மா_சு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். 

இந்திய கடற்படையினர் சுட்டதில் மீன்பிடி படகில் சுமார் 40 குண்டுகள் பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது. படகிலிருந்த 9 மீனவர்களைப் பிடித்து மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர்.
இதனை #விசிக வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj