ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (08:31 IST)

காவல் காத்திருந்த நாயை இரவு நேரத்தில் கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை!

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, 
காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
 
இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதியில் இரவு நேரங்களில் யானை புலி, சிறுத்தை,  உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சமீப காலமாக உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
 
இந்நிலையில் உப்பட்டி வடவயல்
கிராமத்தில் இரவு நேரங்களில் சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்விக் கொண்டு சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்
 
எனவே உலா வரும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.