செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (13:33 IST)

இரும்பு போர்டு விழுந்து தூய்மை பணியாளர் பலி! சென்னையில் பயங்கரம்.!!

Lady Death
சென்னை தரமணியில் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு போர்டு விழுந்ததில் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் ரேணுகா(30). கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்துடன் தங்கி தரமணி 100 அடி சாலையில் உள்ள டிஎல்எப் பில்டிங்கில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
 
ரேணுகா நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல தரமணி டிஎல்எப் வளாகத்திற்குள் நடந்து சென்றார். அப்போது அதிகப்படியான காற்றுடன் மழை பெய்த காரணத்தினால், தரையில் வைத்திருந்த இரண்டு இரும்பு டிஎல்எப் போர்டுகள் பெண்ணின் மீது விழுந்துள்ளது. 
 
இதில் படுகாயம் அடைந்த ரேணுகாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தரமணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.