திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (11:57 IST)

ஜார்கண்ட் ஆளுநர் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பார்-மத்திய உள்துறை அமைச்சகம்!

புதுச்சேரி  துணைநிலை  ஆளுநராக 2021 ஆம் ஆண்டு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிட தனது துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதனை  தொடர்ந்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தேர்தலை முன்னிட்டு மூன்று மாநிலத்தில் ஆளுநராக சி பி ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.