திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (20:49 IST)

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.  எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

மேலும், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இடைநிலை இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க கூறியிருந்தது.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை முன்வரவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.