திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (21:53 IST)

நித்யானந்தாவின் சீடர் வீடியோ வெளியிட்டு தற்கொலை...

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல்...கத்தியால் வெட்டிக்கொண்ட கொடூரம் !

சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. ஆனலும் அவர் தலைமறைவாக இருந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரைப் பிடிக்க போலீஸார் முயன்று வருகின்றனர். அவரது சொத்துகளை குறித்து விவரங்களை கேட்டு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்  - கலையரசி தம்பதியின் மகன் தினேஷ் (27 ). இவர் இரு வருடங்களுக்கு முன்னர் பெங்களூரில் நித்யானந்தாவின் சீடராக இருந்துள்ளார். இந்நிலையில் சென்னை திரிசூலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கியிருந்தபின் , வியாழக்கிழமை சேலத்தில் உள்ள தனது  வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
 
அங்கும் இன்று காலை 10 மணியளவில் யாரும் இல்லாத நிலையில், பேஸ்புக்கில் ஒடு வீடி யோ பதிவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.