திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (22:22 IST)

பெரிய மாற்றத்துக்குத் தொடக்கம் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு புதிய பாதையை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, இன்று முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,
"எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்.

 சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார் எனத்  தெரிவித்துள்ளார்.