1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (14:23 IST)

குழந்தை சுர்ஜித்தை ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் ! மீட்புப் படையினர் நம்பிக்கை

சுமார் 129 அடி ஆளமுள்ள கிணற்றில்,  குழந்தை சுர்ஜித் கிட்டதட்ட  70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சற்றுமுன் பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியானது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது.
முன்னதாக சுர்ஜித்தின் மேல் மண் மூடியிருந்த நிலையில் தற்போது மண்ணை அகற்றி ஒரு கருவியால் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தை அசைவின்றி உள்ளதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தை சுர்ஜித்தை இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் மீட்க முடியும் என தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மாநில எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும், திரையுலக பிரபலங்களும், சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டுமென பிராத்தனை செய்து வருகின்றனர்.