புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (09:32 IST)

தஞ்சை மருத்துவமனை கழிவறையில் குழந்தையின் சடலம்! – தாய் கைது!

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி கழிவறையில் குழந்தை சடலமாக மிதந்த சம்பவத்தில் தாய் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிரசவ வார்டு செயல்படும் பகுதியில் உள்ள கழிவறை ஒன்றில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று பிணமாக மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனை வந்ததும், குழந்தையை பெற்றெடுத்ததும் கழிவறையில் வீசி கொன்றதும் தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.