புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (09:06 IST)

அமைச்சர் ஜெயகுமாருக்கு அறிவில்லையா? தங்கத்தமிழ்செல்வன் தாக்கு

நேற்று ஊடகங்களில் அமைச்சர் ஜெயகுமாரின் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. அந்த ஆடியோவில் உள்ள குரல் தனது குரல் இல்லை என்றும் இதுகுறித்து சட்டரீதியான எந்த வழக்கையும் நேர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்தார். மேலும் எனக்கும் இந்த ஆட்சிக்கும் களங்கம் கற்பிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாகவும், அந்த கும்பலின் வேலைதான் இந்த ஆடியோ என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'ஜெயகுமார் குறித்த ஆடியோவிற்கும் அம்முகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்கிறார். அந்த அறிவு ஜெயகுமாருக்கு ஏன் இல்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவர் என்பதை ஜெயகுமார் நிரூபிக்க வேண்டும்

ஊடகங்களில் இந்த செய்தி ஆடியோ ஆதாரத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? இந்த அடாவடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே குற்றால ஈஸ்வரரை வணங்குவதற்காக குற்றாலம் வந்துள்ளோம் என தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.