வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (08:09 IST)

நாட்டுல இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது தாடி பாலாஜிக்கு இது தேவையா?

இந்தியா பாகிஸ்தான் போர் மேகம், இந்திய ராணுவ வீர்ர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி கொண்டது, முப்படை தள்பதிகளை பிரதமர் மோடி ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பரபரப்பு குறித்த செய்திகளை சேகரிக்க பத்திரிகை நிருபர்கள் இரவுபகலாக பணிபுரிந்து வரும் நிலையில் நடிகர் தாடி பாலாஜி தனது குடும்ப பிரச்சனைக்கு விளக்கம் அளிக்க இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.
 
தனது மனைவி தன் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்தும், தொடர்ந்து தான் சந்தித்து வ்ரும் பிரச்சனைகள் பற்றி தகுந்த ஆதாரத்துடன் பத்திரிகையாளர்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளவிருப்பதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கருத்து கூறிய பாலாஜி மனைவி நித்யா, 'நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. மீண்டும் தாடி பாலாஜி என்னையும் என் நண்பர்களையும் மிரட்ட புதிய ஆதாரங்களை ஏற்படுத்தியுள்ளார். போஷிகாவை சந்திக்க அவருக்கு உரிமை உண்டு என்பதை நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளேன். பின் எதை நிரூபிக்க இந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்றும் நித்யா கேள்வி எழுப்பியுள்ளார்.