செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:36 IST)

காரும் லாரியும் மோதி பயங்கர விபத்து..! போலீசார் விசாரணை..!

Car Accident
சீர்காழி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னை அண்ணாநகரை சேர்ந்த சண்முகம் (52), அவரது மனைவி ராஜம் ஓட்டுநர் ராஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேர் திருக்கடையூரில் நடைபெற்ற திருமணத்திற்கு காரில் சென்றனர். 
 
இவர்கள் வந்த கார் சீர்காழி அருகே நத்தம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்கு எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி பின்புறம் கார் வருவதை பார்க்காமல் வளைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து  லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மேலும் படுகாயம் அடைந்த ஓட்டுனர் ராஜ்குமார் மற்றும் ராஜம் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.