வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (17:44 IST)

கோவில் கடைகள் கெட் அவுட் : மதுரை நீதி மன்றம் உத்தரவு..

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில் வளாகத்தில்  உள்ள  கடைகளையும் காலி செய்வதற்கான கால அவகாசம் ஜன 31 வரை நீட்டிப்பு செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்  வளாகத்தில் கடை நடத்தி வந்தவர்களால் தீ விபத்து ஏற்பட்டது இதனால் அங்கு காலம் காலமாக கடை நடத்தி வந்தவர்களை அப்புறப்படுத்துமாறு  உயர் நீதிமன்ற முதுரை  கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் கோயில் வளாகத்தில் கடை  நடத்தி வந்தவர்களும் பதில் மனுவை தாக்கல் செய்தனர் அதில் கடைகளை காலி செய்வதற்கு கால அவகாசம் தருமாறு கோரப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து உயர் நீதிமன்ற  மதுரை கிளையானது கடைகளை காலி செய்யும் கால அவகாசத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள பரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம் பெற்றிருந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ பிடித்த அதன் தூண்கள் மற்றும் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.