1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (13:56 IST)

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு: புதிய தேதி என்ன?

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் நடைபெற இருந்த நிலையில் இந்த கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பட்டதாரி ஆசிரியருக்கான இடம் ஆறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த பொது பணியிட மாறுதல் நாளை நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் இந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை அனைத்து ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல், பதவி உயர்வு குறித்த பணியிட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva