வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (09:25 IST)

பொங்கலுக்கு பின் மூடப்படுகிறதா டாஸ்மாக் கடைகள்?

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்காததால் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இதுகுறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்தது 
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் கடும் கண்டனங்கள் மற்றும் நெருக்கடி காரணமாக பொங்கல் பண்டிகைக்கு பின் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அல்லது குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் குடிமகன்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது