ஜூன் 1 முதல் தமிழக கோயில்கள் திறக்கப்படலாம்… இபாஸ் பக்தர்கள் அனுமதி! ஆலோசனையில் அறநிலையத்துறை!

Last Updated: திங்கள், 18 மே 2020 (09:25 IST)

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் முக்கியக் கோயில்கள் திறக்கப்பட்டு இ பாஸ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கோயில்களைக் குறைவான பக்தர்களுடன் திறக்கலாமா என்பது குறித்து அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இணையதளம் மூலம் இ பாஸ் விண்ணப்பித்து அதைக் கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என யோசனை செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கோயிலுக்கு 500 பாஸ்கள் வீதம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அரசுக்கு அறநிலையத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :