புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (12:57 IST)

கொரோனா மூன்றாம் அலை அபாயம்! குழந்தைகளுக்கு பரவுமா? – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டதால் தினசரி கொரோனா பாதிப்புகள் 60 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதனால் விரைவில் கொரோனா இரண்டாம் அலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ள மருத்துவ கல்லூரி இயக்குனர், கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என வல்லுனர்கள் எச்சரிப்பதால் குழந்தைகள் நல மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 100 படுக்கைகளை கூடுதலாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.