தமிழகத்தின் புதிய ஆளுனர் ஆர்.என்.ரவி! – பதவியேற்பது எப்போது?
தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.எம்.ரவி அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது பதவியேற்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் ஆளுனராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுனர் ஆர்.என்.ரவி செப்டம்பர் 18 அன்று பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.