செவ்வாய், 4 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (14:23 IST)

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Heat

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் வரும் 8ம் தேதி வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, இன்று முதல் 8ம் தேதி வரை அதிகபட்சமாக வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வானிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிசி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும், குறைந்த பட்ச வெப்பநிலை 24-25 டிகிசி செல்சியஸை ஒட்டி இருக்கும்

 

மார்ச் 10ம் தேதியில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். அதுவரை வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K