இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப் போகுது கனமழை! – எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோடை காலம் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்ப அதிர்ச்சியாக மிதமான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி இன்று இன்னும் சில மணி நேரங்களில் திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K