செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (21:47 IST)

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்

தேசிய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.


 

 
சட்டப்பேரைவயில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்‌கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் கடந்த 5ஆண்டுகளில் 959 புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
 
அதன் காரணமாக, கடந்த 2 வருடங்களில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 44.8 சதவிகிதமாகவும், மாணவிகளின் சேர்க்கை விகிதம் 42.7 சதவிகிதமாகவும் இருப்பதாக அன்பழகன் குறிப்பிட்டார்.
 
தேசிய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும்  தெரிவித்தார்.