செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (09:14 IST)

இன்று உங்க ஃபோனுக்கு இப்படி எச்சரிக்கை வரும்.. பயப்பட வேண்டாம்! – காரணம் இதுதான்!

Emergency alert
பேரிடர், அவசர நிலை எச்சரிக்கை விடுக்கும் புதிய திட்டத்தை இன்று சோதிக்க உள்ளதால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்தி வந்தால் அஞ்ச வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இந்தியாவில் சமீப காலமாக பேரிடர் மற்றும் அவசர கால எச்சரிக்கைகளை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும் திட்டம் குறித்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. வருடம் முழுவதும் பல நிலநடுக்கங்களை சந்திக்கும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.

இதை இந்தியாவிலும் அறிமுகம் செய்வதன் மூலம் பேரிடர், அவசரநிலை எச்சரிக்கையை எளிதாக மொபைல் ஃபோன்கள் மூலமாகவே மக்களுக்கு தெரியப்படுத்த முடியும்.
இன்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து தொலைத்தொடர்பு துறையுடன் சேர்ந்து “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மேற்கொள்கின்றன.

இதனால் இப்பகுதியில் உள்ள மக்களின் ஸ்மார்ட்போனில் அலெர்ட் மெசேஜ் திரை ஓப்பன் ஆவதுடன், அலெர்ட் சத்தமும் கேட்கலாம். இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K