செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:01 IST)

100 % முகக்கவசம் 100% வாக்கு - தமிழிசை சவுந்தரராஜன் !

சென்னையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார் .

 
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில்  வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், முதியோர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனவும்  இதன்பொருட்டு தனிமனித இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்தும்  அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வேண்டுமென என்றும் அவர் தெரிவித்தார் .