தமிழ்நாடு, புதுச்சேரியில் 59% அதிக மழை பதிவு!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59% அதிக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முதலாக பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59% அதிக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ.-க்கு பதில் 71 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119% அதிக மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.