உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரை அடித்து நொறுக்கிய ஸ்விகி ஊழியர்!
உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவரை ஸ்விக்கி ஊழியர் அடித்து நொறுக்கியதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆன்லைன் மூலம் உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் தனக்கு தேவையான உணவையு உணவை ஆர்டர் செய்தார். ஆனால் அந்த உணவு குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டது
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் ஸ்விக்கி கஸ்டமர் கேரில் புகார் செய்துள்ளார். இதனால் ஸ்விக்கி நிர்வாகம் அந்த டெலிவரி ஊழியருக்கு எச்சரிக்கை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்விக்கி ஊழியர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து, புகார் அளித்த வாடிக்கையாளரை அடித்து நொறுக்கி உள்ளார். இதனால் வாடிக்கையாளர் படுகாயமடைந்து முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் இதுகுறித்து போலீசாரிடம் வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்விக்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நடக்காமல் பார்த்து கொள்வதாக ஸ்விக்கி நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியை ஏற்று வழக்கு பதிவு ஏதும் பதிவு செய்யாமல் ஸ்விக்கி ஊழியர்களை எச்சரித்து அனுப்பி உள்ளது
வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதுதான் ஒரு நிறுவனத்தின் கடமையாக இருக்கும் நிலையில் அந்த வாடிக்கையாளரை நிறுவனத்தின் ஊழியர்களே அடித்து உதைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது