1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:15 IST)

மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை! சுகாதாரத்துறை அதிரடி!

தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகளோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நேற்று வரை எண்ணிக்கை 1173 ஆக உள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான சோதனைகளை செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் சுகாதாரத்துறையோ அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் கொரோனா சோதனை செய்தால் போதும் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய பிரச்சனைகளோடு வரும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

ஸ்வாப் டெஸ்ட் கிட்கள் இல்லாததால் முன்னர் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டும் சோதனை செய்யப்பட்டதாகவும் தற்போது போதுமான அளவில் சோதனை கிட்கள் வந்துவிட்டதால் அனைவருக்கும் சோதனை செய்ய சொல்லி அறிவுறுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.