1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (21:59 IST)

மதுரை மாணவன் கடத்தல் வழக்கு! மனைவி சூர்யாவின் உடலை வாங்க மறுத்த ஐஏஎஸ் கணவர்..!

மதுரை மாணவன் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சூர்யா, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவருடைய கணவர் ரஞ்சித் குமார் ஐஏஎஸ், மனைவியின் உடலை வாங்க மறுத்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவனை ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்தியதாக கூறப்பட்டது. இந்த கடத்தலில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யா தற்கொலை செய்து கொண்டார்.

 மேலும் அவர் எழுதிய கடிதத்தில் இந்த கடத்தலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சூர்யா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில் அவரது உடலை அவரது கணவர் ரஞ்சித் குமார் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சூர்யாவின் உடலை அவருடைய உறவினர்கள் பெற்று இறுதி சடங்கு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva