செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மே 2023 (11:51 IST)

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது! – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மாடுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

பின்னர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை ஏற்படுத்தி தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதை அனுமதித்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

Edit by Prasanth.K