புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 மே 2018 (11:52 IST)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் திடீர் சிக்கல்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வந்தாலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பாக 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துவிட்டது. மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியும் தரவில்லை. மேலும் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்க வாய்ப்பே இல்லை என்று தூத்துகுடி கலெக்டராக பதவியேற்ற சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேலும் இன்று தூத்துகுடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், நாகர்கோவிலை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் அவர் வைத்தார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. கோடை விடுமுறைக்கு பின்னரே இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.