வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:12 IST)

சாத்தான்குளம் லாக்கப் மரணம்… குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப் கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கின. அந்த கொலைகள் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது.

தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவலில் இருந்தபோது இறந்த தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதி பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர். கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால் இன்று அவர்களுக்கான பிணையை மறுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.