திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (14:59 IST)

அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

supreme
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை 3 வாரங்களுக்குள் சென்னை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
 
 சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும் பொதுக்குழு சட்டவிரோதமாக கூட்டப்பட்டது என்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடக்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு முறையீடு செய்யப்பட்டது
 
இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்கலாம் என்றும் அதிகபட்சமாக மூன்று வாரத்திற்குள் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதுவரை தற்போதைய நிலையை தொடரட்டும் என்றும் இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது