செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (21:15 IST)

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி

உடல்நல பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் அவர் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார்
 
உடல்நல பரிசோதனை மற்றும் அமெரிக்க, கனடா ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை ஆகியவற்றை முடித்துவிட்டு இன்று மாலை சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். 
 
இந்த நிலையில் 'காலா'படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9 ஆம் தேதி  சென்னையில் உள்ள YMCA மைதானத்தில்( நந்தனம் ) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் அவர் அரசியல் கட்சி குறித்தும், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியபோது, 'தமிழ் மக்களின் மேன்மைக்காக நன்கு ஆராய்ந்து, தீர்க்கமாக சிந்தித்து, நல்ல பல திட்டங்களோடு, தீர்வுகளோடு விரைவில் அரசியல் களம் இறங்குவார்' என்று கூறிவருகின்றனர்